சென்னை:ஆவடியில் மூன்று பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தனியார் பேருந்து அவர்களது காரை முந்தி சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் காரில் வேகமாக சென்று பேருந்தை மறித்தனர். தொடர்ந்து அதன் ஓட்டுநரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
பாஜக வழக்கறிஞர் தாக்குதல்?
பேருந்து ஓட்டுநர் தன்னை தாக்கிய நபர்களை காணொலி எடுத்துள்ளார். அந்த காணொலியில் அவர்கள் சென்ற காரில் பாஜக கொடியுடன் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
ஓட்டுநர் மீது பாஜக வழக்கறிஞர் தாக்குதல்? மேலும் காரில் மதுபாட்டில்களும் இருந்தன. இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பள்ளிகளில் முழுவீச்சில் தூய்மைப் பணிகள்