தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2023, 7:24 PM IST

ETV Bharat / state

"பாஜகவில் இருந்து விலக கட்டாயப்படுத்தினர்" - பாஜக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாஜகவில் இருந்து விலக தன்னை கட்டாயப்படுத்தினார்கள் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆர்.கே.சரவணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

”பாஜகவில் இருந்து விலக எங்களை கட்டாயப்படுத்தினர்” - பாஜக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
”பாஜகவில் இருந்து விலக எங்களை கட்டாயப்படுத்தினர்” - பாஜக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜகவில் இருந்து விலக தன்னை கட்டாயப்படுத்தினார்கள் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ

சென்னை:தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணி இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமால் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதேநேரம் அவர் தமிழ்நாடு பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தது மட்டுமல்லமால், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த 13 பேர் விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரப்பப்பட்டது.

அதில் சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், ராமபுரம் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்களும் கூறப்பட்டது. மேலும் இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்டத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டத் தலைவர் ஒரத்தி அன்பரசு கடிதம் வெளியிட்டார்.

நிர்வாகிகள் பெயர்களில் மாறுபாடு

இந்த கடிதத்தில், மாவட்டச் செயலாளர்கள் என்று கே.விக்னேஷ், ஆடலரசு கோபி, பழனிநாதன், செங்குட்டு ராஜன், புருஷோத்தமன், லோகேஷ், பிரவீன் குமார், ராகேஷ், சூர்யா மற்றும் பிருத்திவிராஜ் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், 7.12.2022 அன்று மாவட்டத் தலைவர் மு.மனோகரன் ஒப்புதலோடு ஒரத்தி அன்பரசு என்ற ஐடி பிரிவினுடைய மாவட்டத் தலைவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், கட்சி நிர்வாகிகள், மாவட்டத் துணைத் தலைவர்கள் என ஆர்.கே.சரவணன், ஸ்ரீராம் கனகபாலன், என்.ரவிக்குமார், ஜி.பிரகாஷ், எம்.தாரக்குமார், கே.லாரன்ஸ், ஆர்.குருநாதன் ஆகியோரின் பெயர் உள்ளது.

எனவே தற்போது வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பெயர்களுக்கும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியலும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் தன்னை இணையக் கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்ததாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆர்.கே.சரவணன், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "அதிமுக நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்துப் போட வைத்தனர் என்றும், தான் இப்போதும் பாஜகவில்தான் இருக்கிறேன் என்றும், மேலும் பாஜகவில் இருந்து விலகும் எண்ணமே தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரகாஷ் கூறும்போது, "பாஜக ஐடி பிரிவுச் செயலாளர் ஒரத்தி அன்பரசு என்னை கட்சியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினார். அதனை ஏற்காமல் நான் தொடர்ந்து கட்சியில் நீடித்து வருகிறேன். மேலும் கட்சியில் இருந்து விலகுவதற்கு விரும்பம் இல்லை எனவும் கூறினேன். 50 பேர் என்னை கட்சியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சிந்தாந்த அடிப்படையில் பாஜகவில் தொடர்ந்து இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரவிக்குமார் கூறுகையில், "ஐடி விங் செயலாளர்கள் பதவியில் இருந்து விலகியதாக வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்றார். சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் மனேகரன், கட்சியில் இருந்து விலகியதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர் எனவும், நாங்கள் வெளியிட்ட பட்டியிலில் இல்லாதவர்களை கூறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது தொடர்பாக அண்ணாமலையும், அதிமுகவைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் மாறி மாறி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வார்னிங்!

ABOUT THE AUTHOR

...view details