குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக, தோழமைக் கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள் தொடங்கிவைத்தனர்.
அந்தவகையில் ஆவடி மார்க்கெட் பகுதியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடந்துசென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் கையெழுத்துப் பெற்றனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது இந்தியாவிற்கே சாபக்கேடு நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.