தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினியின் முடிவுக்கு பாஜக காரணமல்ல - குஷ்பு - ரஜினியின் முடிவுக்கு பாஜக காரணமல்ல. ரஜினியின் முடிவு ஏற்படுத்தும்

சென்னை: ரஜினியின் முடிவுக்கு பாஜக காரணமல்ல என்று அக்கட்சியைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னை

By

Published : Jan 1, 2021, 2:40 PM IST

'மாயத்திரை' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "சமீபத்தில் சென்னை வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழ்நாட்டில் அதிமுக கட்சியுடன் மிகப்பெரிய கூட்டணியில் உள்ளோம் என்று கூறியுள்ளார். இதற்குப்பின்னும் கூட்டணி குறித்து எந்தவித சந்தேகமும் இருக்ககூடாது.

குஷ்பு செய்தியாளர் சந்திப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தலைவர்தான் அறிவிப்பார். அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து நான் பேசமுடியாது. ரஜினியின் முடிவுக்கு பாஜக காரணமல்ல. ரஜினியின் முடிவு ஏற்படுத்தும் தாக்கம் தேர்தல் சமயத்தில்தான் தெரியும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details