கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது.
மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது என்று பல்வேறு தரப்பினரும் அந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழ்நாடு பாஜக இட்ட ட்வீட் இந்தச்சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பாஜக இட்ட ட்விட்டர் பதிவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் அதில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் பாஜக!