குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் அதை பற்றி தவறாக தகவல் பரப்புபவர்களை கண்டித்தும் பாஜக சார்பில் சென்னை விருந்தினர் மாளிகை முதல் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, இல.கணேசன் தலைமையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், பொது மேடைகளில் இந்து கடவுள், மதத்தை கொச்சை படுத்தி தொடந்து பேசி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கவும், வன்முறை தூண்டும் விதத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.