சென்னை:ஆவடி காந்தி நகர், சத்தியவாணி முத்து தெருவைச் சேர்ந்தவர் தேவிகா(36). இவர் தனது முதல் கணவருடன் விவாகரத்தான நிலையில் ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது ஆவடி, கோவர்த்தனகிரி, 4வது தெருவைச் சேர்ந்த பாஜக திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி (51) தேவிகாவுடன் நெருங்கி பழகி, முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன் என பொய்யான தகவல் கூறி தொடர்புடன் இருந்து உள்ளார்.
பின்னர், தேவிகாவை 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 2வது திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின், மூர்த்தியின் முதல் மனைவி நளினிக்கு இந்த விவரம் தெரிந்து பிரச்னை செய்து, பின்னர் தேவிகாவையும் குழந்தையும் ஏற்றுக்கொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தனது கணவருக்கு பிரேமா என்ற பெண்ணுடன் தவறான உறவு இருந்ததை அறிந்த முதல் மனைவி பிரச்னை செய்து அவரை தூரத்தி விட்டார்.
இதையும் படிங்க:13 வயது சிறுமியை கடத்தி 28 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை; பிகாரில் நடந்தது என்ன?