சென்னை:தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துறையினர், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.