சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேர்தல் பணிக்குழு உறுப்பினர் திருமலைசாமி, செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'தேனியில் 13ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை' - திருமலைசாமி தகவல்! - election compaign
சென்னை: ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 13 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக பாஜக தேர்தல் பணிக்குழு உறுப்பினர் திருமலைசாமி தெரிவித்துள்ளார்.
"இந்திய தேர்தல் ஆணையம் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் பாஜக தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பதை வரவேற்றுள்ளார். அதற்கு மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் அதனை உணர்ந்து அவர்கள் ரசிகர்கள் செயல்படுவார்கள் என நினைக்கிறோம்.
ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என பொய் கூறியிருக்கிறார். ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகிற 13-ஆம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அதேபோல் 14 ஆம் தேதி நிதின் கட்கரி சேலம், கோவை பகுதிகளில் பரப்புரை செய்ய உள்ளார்", என்றார்.