தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வெங்காய விலை குறித்த கவலை பாஜகவுக்கு உள்ளது’ - பொன். ராதாகிருஷ்ணன் - வெங்காய விலை குறித்து பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pon radhakrishnan, பொன். ராதாகிருஷ்ணன்
pon radhakrishnan

By

Published : Dec 6, 2019, 3:32 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வெங்காய விலை உயர்வு பற்றிய கவலை அரசுக்கு இருக்கிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது" என்று கூறினார்.

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நான்கு குற்றவாளிகளை ஹைதராபாத் காவலர்கள் என்கவுண்டர் செய்தது குறித்து பேசிய அவர், கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிச் செல்லும் போது வேறு வழியில்லாத சூழலில் காவல்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது அதை குற்றம் என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகவே உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details