தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் - தலைமை அறிவிப்பு - சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், செப்.1ஆம் தேதி தென்காசியில் தொடங்கி தொடர்ந்து பிற மாவட்டங்களில் நடைபெற இருப்பதாக அக்கட்சின் மாநிலத் தலைமை அறிவித்துள்ளது.

பாஜக செயல் வீரர்கள் கூட்டம்
பாஜக செயல் வீரர்கள் கூட்டம்

By

Published : Aug 31, 2021, 12:45 AM IST

சென்னை:செப்.1 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தென்காசியில் தொடங்குகிறது.

இது குறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை, செப்.1 ஆம் தேதி புதன்கிழமை முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

இந்தப் பயணத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு, கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு கூட்டம், கிளை நிர்வாகிகள் இல்லத்திற்கு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கிறது. தொடர்ந்து, இதே அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

தென்மாவட்ட சுற்றுப் பயணங்கள்

முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் நடைபெற இருக்கிற சுற்றுப்பயணம், செப்.,1ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்கி தொடர்ந்து பிற மாவட்டங்களில் நடைபெறும்.

தென்காசியில் புதன்கிழமை காலை 10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திலும், நண்பகல் 12 மணிக்கு தென்காசியில் சமுதாயத்தலைவர்கள் கூட்டத்திலும், பிற்பகல் நெற்கட்டுசேவலில் உள்ள புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாநிலத் தலைவர் மாலை 4 மணிக்கு, சங்கரன்கோவில் நகரில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

செப்.2ஆம் தேதி, காலை 10 மணிக்கு, தூத்துக்குடி மூன்றாம் மைல் அருகில் நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திலும், நண்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி நகரில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டத்திலும், பெருந்தலைவர் காமராஜ் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளில் பாஜக சட்டப்பேரை உறுப்பினர்கள் குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி காலை 10 மணியளவில், திருநெல்வேலியில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் அண்ணாமலை அஞ்சலி செலுத்துகிறார். பின்பு விருதுநகர் மேற்கு மாவட்டத்தில், பயணத்தை தொடர்ந்து திட்டமிட்டபடி நிகழச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பிறமாவட்ட சுற்றுப்பயண விபரங்கள்

தருமபுரியில் செப்., 6ஆம் தேதியும், செப்., 11ஆம் தேதி அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழாவிலும், செப்.14 ஆம் தேதி கள்ளக்குறிச்சியிலும், செப்.15 ஆம் தேதி மயிலாடுதுறையிலும், செப்.16ஆம் தேதி விழுப்புரத்திலும், செப்.17, 18 ஆகிய தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து, செப்.19 ஆம் தேதி வடசென்னை கிழக்கு, செப்.,20ஆம் தேதி திருவாரூர், செப்.22 ஆம் தேதி மதுரை புறநகர், செப்.24 ஆம் தேதி சென்னை மேற்கு, செப்.,26 ஆம் தேதி கன்னியாகுமரி, செப்.27 ஆம் தேதி சிவகங்கை, செப்.28 ஆம் தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டம், செப்.29 ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு என மாவட்டங்கள் தோறும் செயல்வீரர்கள் கூட்டம் , சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு கூட்டம், மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெறும்.

மாநிலத்தலைவரின் இந்த முதல் கட்ட சுற்றுப்பயணத்திற்காக, மாநில அளவில், ஓபிசி அணி தலைவர் ப.லோகநாதன் தலைமையில், மாநில செயலாளர் வரதராஜன், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி .செல்வம் , இளைஞரணி பொது செயலாளர் ராஜ்குமார் மற்றும் அந்தந்த மாவட்டத்தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களைக் கொண்ட சுற்றுப்பயண பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சுற்றுப்பயண தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் செப். 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details