தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது - சித்தராமையா - பாஜக

தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது - சித்தராமையா
பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது - சித்தராமையா

By

Published : Jul 30, 2022, 6:01 PM IST

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று (ஜூலை 30) சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சி தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுகிறது.

நான் கேட்டதையும், படித்ததையும் வைத்து சொல்கிறேன். மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தேன். எனக்கு அம்பேத்கர் விருது விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வழங்கப்படுகிறது. நான் அதை பெருமையாக கருதுகிறேன். கர்நாடகாவில் ஆட்சியை அமைத்த பாஜகவால் தமிழ்நாட்டில் அமைக்க முடியாது என்றார்.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:”இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது” முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details