சென்னை:தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷுக்கு கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
மாணவனின் தற்கொலைக்கு திமுகதான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் நீட் தேர்வை வைத்து திமுக மிகப்பெரிய அரசியலை செய்துவருவதாகவும், அந்த அரசியலுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும்போது வெளிநடப்பு செய்தனர் எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு யார் கொண்டு வந்தது?
தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வுக்கு இதுவரை தமிழ்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணிதான் நீட் நுழைவுத்தேர்வை கொண்டுவந்தது. நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வெள்ளை அறிக்கை