தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஃப்.ஐ.ஆருக்கே போராடணும்... மாநில நிலைமை குறித்து ஆளுநரிடம் அடுக்கிய அண்ணாமலை! - நில அபகரிப்பு புகார்

ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல, தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல -  அண்ணாமலை
ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல - அண்ணாமலை

By

Published : Oct 12, 2021, 10:21 PM IST

Updated : Oct 13, 2021, 6:08 AM IST

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து மனு அளித்தார். அப்போது பாஜக நிர்வாகிகள் எச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீரழிந்து உள்ளது என்பதை ஆளுநரிடம் தெரிவித்தோம். கடலூர் மற்றும் திருநெல்வேலி எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். 4 ஆணவ கொலைகள், ஒரு பெண்ணின் தலையை வெட்டி மற்றொரு இடத்தில் வைக்கிறார்கள். தமிழகத்தில் அராஜகம் தலை தூக்குகிறது,

நில அபகரிப்பு புகார்

"ஒரு குற்றச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தால் முதல் தகவல் அறிக்கைக்கே போராட வேண்டி உள்ளது. காவல்துறை அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் செல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். நில அபகரிப்பு புகார் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் ஆளுநரிடம் புகாராக அளித்துள்ளோம்.

கடலூர் மற்றும் திருநெல்வேலி எம்பிக்கள் தொடர்பான வழக்கு குறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேசியிருக்க வேண்டும், அப்படி அவர் செய்யாததால், ஆளுநரை சந்தித்து புகார் அளித்தோம்.

ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல - அண்ணாமலை

பாஜக வேட்பாளர் அல்ல

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் வாக்கு எண்ணும் பெட்டியை திறக்காமலே முடிவுகளை அறிவித்துள்ளனர், இது திமுகவிற்கு கை வந்த கலை.
கோவை குருடம்பாளையம் ஊராட்சி தேர்தலில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல எனவும், தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை எனவும், அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே என அண்ணாமலை தெரிவித்தார்.
திமுகவின் அராஜக செயல்களுக்கு ஆளுநர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி முடிவை தருவார் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இதையும் படிங்க :உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி முன்னிலை!

Last Updated : Oct 13, 2021, 6:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details