சென்னை: கடந்த பத்து நாட்களாக அதிமுகவில் நிலவி வந்த குழப்பங்களுக்கு மத்தியில் இன்று(ஜூன் 23) சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
இந்தச் சூழலில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரில் சென்று சந்திதனர். பின்னர் அதனைத்தொடர்ந்து அண்ணாமலை, சி.டி. ரவி, கரு. நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரை சந்தித்தனர்.
பாஜக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவிற்கு, அதிமுக சார்பில் ஆதரவு அளிக்க வேண்டும் என இச்சந்திப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'பதவி வெறி எடப்பாடிக்கு கண்ணை மறைத்து விட்டது' - வைத்திலிங்கம்