தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கதருக்குள் காவி-காவிக்குள் கதர்...! - காங்., பாஜகவை கலாய்த்த சீமான் - Semman speech videos

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Seeman videos

By

Published : Oct 14, 2019, 10:01 PM IST

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராஜிவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு, விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். இலங்கைத் தமிழர்கள் வாழ வழியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கைக்குழந்தை வரை பயங்கரவாதியாகப் பார்க்கின்றனர்.

தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. இலங்கை மக்களை அடித்து விரட்டி கால்நடையாக தமிழ்நாட்டிற்கு வந்தபோது எங்கே சென்றார்கள். ராஜிவ்காந்தியை கொன்றுவிட்டதாகக் கூறிதான் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள். இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ்தான்.

சத்தியத்தின் பக்கம்தான் உறுதியாக நிற்க முடியும். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ராணுவ பிடியில் இருப்பதாகத் தகவல் சொன்னபோது பிரபாகரன் குடும்பத்தினர் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று சொன்னது யார். அதே காயமும் வன்மமும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளாக அநீதிக்கான நீதியைப் பெற அவ்வளவு தடைகள். ஒருவரின் மரணத்திற்காக ஒரு இனத்தின் மரணத்தையே சமப்படுத்தி நிறுத்தியுள்ளனர்.

சீமான் பேட்டி

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாகத்தான் பார்க்கிறோம். அணு உலையை எதிர்த்துப் போராடினால் தேச துரோகி என இரண்டு கட்சிகளும் சொல்கிறது. நீட், ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டுவந்தது காங்கிரஸ், அதை செயல்படுத்தியது பாஜக. நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜிஎஸ்டியால்தான் உலக வங்கியே கூறுகிறது. கதர் கட்டிய பாஜக காங்கிரஸ், காவி உடுத்திய காங்கிரஸ் பாஜக. இரு கட்சிகளுக்கும் கல்வி, பொருளாதார, வெளியுறவு கொள்கைகள் ஒன்றுதான்.

சீன அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்ததால், பிரதமர் வேட்டி கட்டியிருப்பார். தமிழனின் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சிதான்”என்றார்.

இதையும் படிங்க: சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிய வேண்டும் - காங். எம்.பி. ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details