சென்னை:திமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்ட நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலரிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் வீடு மற்றும் திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். ஆனால் இந்தச் சோதனையை ஒரு மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வருமான வரித்துறையினர் நடத்தாமல், தேர்தலுக்கு நான்கு நாள்கள் இருக்கும்போது நடத்துவது பாஜக, அதிமுக அரசுகளின் தூண்டுதலின் பெயரில் உள் நோக்கத்துடன் நடப்பதாகவே தெரிகிறது.