தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று (ஏப்.16) தனது 81ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் வாழ்த்து
அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
திமுக தலைவர் வாழ்த்து
தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடின் மீதும், தமிழ்நாடு மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர், பொதுவாழ்வில் போற்றத்தக்க வகையில் பணியாற்றியவர். அரசியலிலும் நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர்.
அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க ஆரோக்கியத்துடனும் நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனக்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தலில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்குச் சம்பளம் இல்லை!