சென்னை ஆர்.கே. நகர் காவாங்கரைப் பகுதியில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பரத் (19) பிறந்தநாளை அவருடன் அவரது நண்பர்கள் விஜய் (19), ஆனந்தன் (21), குமார் (21), மகேஷ் குமார் (22) ஆகியோர் நள்ளிரவில் கூச்சலிட்டபடி கேக் வெட்டி கொண்டாடினர்.
ஆர்.கே. நகரில் இளைஞர்கள் கேக் வெட்டித் தகராறு - Youngsters birthday celebration
சென்னை: ஆர்.கே. நகர் பகுதியில் நண்பர்களோடு கேக் வெட்டியதில் தகராறு ஏற்பட்டதால் ஐந்து இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![ஆர்.கே. நகரில் இளைஞர்கள் கேக் வெட்டித் தகராறு RK Nagar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:24:20:1606575260-tn-che-01-birthday-clash-arrest-script-tn10002-28112020193513-2811f-1606572313-157.jpg)
Chennai
அருகில் வீட்டிலிருக்கும் குமார் என்பவர் பிறந்தநாள் கொண்டாடுவது தவறு கிடையாது. கூச்சல் இல்லாமல் கொண்டாடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் செவிசாய்க்காமல் மது அருந்திவிட்டு குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது வீட்டில் கற்கள், பாட்டிலைத் தூக்கி எரிந்து கோஷமிட்டனர்.
உடனடியாக குமார் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.