வானத்தில் கூட்டம் கூட்டமாய் பறந்து செல்லும் பறவைகளைக் காண்பதே தனி சுகம். அவைப் பறந்து செல்லும் அழகும், ஒழுக்கமும் பார்க்க பார்க்க பிரமிப்பூட்டும். இயற்கையின் உயிர் நாடியாக நீர், நிலம் என உணவுச் சங்கிலியின் அனைத்து இடங்களிலும் வாழும் உயிரினம் பறவைகள் மட்டுமே.
ஒரு பறவையின் இறப்பு என்பது சுற்றுச்சூழல் பாதிப்பின் அறிகுறியாகும். கடற்கரையோரமாக மக்களை வரவேற்க காத்திருக்கும் பறவைகள் கரோனா பாதிப்பால் உணவின்றி வாழ்ந்து வருவதுதான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனதை ரசிக்க வைக்கும் கடற்கறையோர பறவைக் கூட்டம் உணவில்லாமல் எங்கு ஓய்வெடுக்கும் என்பது மனதில் ஒரு கேள்வியாக உள்ளன. உணவைத் தேடி அலையும் பறவைகள் பற்றிய சிறியப் பார்வை.
ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைப் பூங்கா போன்ற அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் மூடப்பட்டுள்ளன. கடற்கரை, பூங்காக்களுக்கு வந்து செல்லும் பறவைகள், மனித நடமாட்டம் இல்லாததால் உணவின்றி வாழ்ந்து வருகின்றது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை போன்ற முக்கியக் கடற்கரைகளுக்குக் காலை, மாலை ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. காலை, மாலை உடற்பயிற்சிக்குச் செல்லும் மக்கள், பிற வேலைக்கு செல்லும் மக்கள் அனைவரும் அங்கு வந்து செல்லும் பறவைகளுக்கு உணவு அளிப்பார்கள். தற்போது அனைத்து கடற்கரை மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் பறவைகள் உணவின்றி தவித்து வருகின்றன.
இது தொடர்பாக 'பறவை' டென்சில் (உளவியல் நிபுணர் ) கூறுகையில், "நான் அதிகாலை, 5:30 மணி, மாலை, 4:30 மணி என, இரு வேலையும், பிரத்யேகமாக செய்யப்பட்ட மரப்பெட்டிகளில், பறவைகளுக்குத் தேவையான உணவையும், பாத்திரங்களில் தண்ணீரையும் நிரப்பி விடுவேன்.