சென்னை:தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 20) பேரவையில் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், “குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 12 மாநில பல்கலைக்கழகங்களிலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.