சென்னைஅடுத்த தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், ஜீவா(26). இவர் வழக்கம் போல நேற்று வேலைக்குச்சென்றுவிட்டு இரவு தனது வீட்டின் வெளியே, தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனமான ராயல் என்பில்ட் புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குச்சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று (அக்.20) வழக்கம்போல காலையில் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, நிறுத்தி வைத்திருந்த இடத்தை விட்டு தள்ளி நின்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இருசக்கர வாகனத்தின் அருகில் சென்று பார்த்தபோது வாகனம் ஆங்காங்கே கற்களால் சேதமடைந்து இருந்தது.