கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நபர் இருசக்கர வாகனத்தை திருடி காவல்துறையிடம் சிக்கி மீண்டும் சிறை சென்றுள்ளார். ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் நேற்று சென்னை அண்ணா சாலை அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் அவர் திருவான்மியூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலிருந்து இருசக்கர வாகனம் திருடி வந்தது தெரியவந்தது.