தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூந்தமல்லியில் தொடரும் பைக் திருட்டு.. வீட்டின் முன் இருந்த பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி! - பூந்தமல்லி காவல்நிலையம்

Bike theft in Poondhamallee: பூந்தமல்லியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Bike theft in Poondhamallee
பூந்தமல்லியில் தொடரும் பைக் திருட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 11:37 AM IST

Bike Thedt CCTV In Chennai Poonamaallee

சென்னை: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி, சிப்பாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ரஞ்சித் (வயது 24) மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

நேற்று (அக். 30) வீட்டிற்கு வெளியே வந்து இருசக்கர வாகனத்தை பார்த்தபோது விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் இல்லாததைக் கண்டு ரஞ்சித் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்து இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து தள்ளிக் கொண்டு திருடி சென்றது தெரிய வந்தது.

சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒயரை பிடுங்கிவிட்டு ஸ்டார்ட் செய்ய முயன்ற போது இருசக்கர வாகனம் ஸ்டார் ஆகாத நிலையில், உடனடியாக தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்து ஒயரை சூடாக்கி இழுத்து உள்ளார். அப்போதும் ஒயர் வராததால் மீண்டும் பற்ற வைத்து ஒயரை சூடாக்கி இழுத்து உள்ளார்.

இரண்டாவது முறையில் ஒயர் வந்ததால் வண்டியை ஸ்டார்ட் செய்து மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசில் ரஞ்சித் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் குழந்தை திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details