சென்னை நுங்கம்பாக்கம் அப்பு தெருவில் எம்எம் சாய் ஆண்கள் விடுதியில் வசித்து வருபவர் கெவின் ப்ரதாப். கடந்த 10ஆம் தேதி இரவு வழக்கம்போல் இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அக்.11ஆம் தேதி காலை பார்க்கும் பொழுது இருசக்கர வாகனம் மாயமாகியுள்ளது.
இருசக்கர வாகனத்தை திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி - சென்னை நுங்கம்பாக்கம் இருசக்கர வாகனம் திருட்டு
சென்னை நுங்கம்பாக்கத்தில் விடுதியின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத இருவர் திருடியுள்ளனர்.
bike
சிசிடிவி காட்சியை ஆய்வுசெய்தபோது அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கெவின் பிரதாப் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் இரவு நேரங்களில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் திருடுபோவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.