சென்னை: கோயம்பேடு முதல் தாம்பரம் வரை செல்லும் 70 எண் கொண்ட மாநகர பேருந்தானது, வடபழனி 100 அடி சாலை வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. குறிப்பாக மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன் சென்ற இருசக்கர வாகனத்தின் வலதுபுறம் மோதி உள்ளது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்த போது, அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அங்கு சென்ற பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் , உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.