சென்னை :கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100ஆவது நினைவு நாள் சமீபத்தில் முடிந்தது.
இதனையொட்டி டெல்லி நாடாளுமன்ற இல்லத்தில் பாரதியார் 100ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட சிலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர் கணபதிராமன் தலைமையில் இசைக் குழுவை சேர்ந்த 50 பேர் கொண்ட மாணவ, மாணவிகள் பாரதியாரின் ஐந்து பாடல்களை இசைத்து பாடவுள்ளனர்.
பாரதியார் பாடல் பாடிய மாணவ,மாணவிகள் இதற்காக இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து முனைவர் கணபதிராமன் தலைமையில் மாணவ மாணவிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் பாடல்களைப் பாடி காணொலி ஒன்றை சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : புதுமாப்பிள்ளை கார் மோதி உயிரிழப்பு - சிசிடிவி வைரல்!