திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், " மத்திய அரசின் 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்துக் கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் கலந்துகொண்ட பெரும்பாலான நிறுவனங்களை நிராகரித்துவிட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
இணைய வசதி டெண்டரில் முறைகேடு: உயர் நீதிமன்றத்தில் திமுக மனு! - Bharat net tender scam DMK seeks case against CM Edappadi Palanisamy
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இரு நிறுவனங்களைத் தேர்வுசெய்யும் நோக்குடன் விதிகள் மாற்றம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருப்பத்திற்கிணங்க டெண்டர் ஒதுக்கும்படி தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராக இருந்த சந்தோஷ்பாபு, டான்ஃபினெட் நிர்வாக இயக்குநர் எம்.எஸ். சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த முறைகேடு தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : 'கரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம்'