தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரத் பந்த் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது - air passengers low in Chennai airport

சென்னை: பாரத் பந்த் காரணமாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாததால் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவிருந்த விமானமும், மதுரையிலிருந்து சென்னை வரும் விமானமும் இன்று ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னை
சென்னை

By

Published : Dec 8, 2020, 9:38 AM IST

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் திமுக உள்ளிட்ட எதிா்கட்சிகள் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பாரத் பந்த் காரணமாக சென்னை விமானநிலையத்திலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. மேலும் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு இன்று பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அவா்களுக்கு இன்று வார விடுமுறை, ஓய்வு நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விமானநிலைய வளாகத்திற்குள் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்

சமீபகாலமாக ஒரு நாளுக்கு 20 ஆயிரத்திலிருந்து 22 ஆயிரம் பயணிகள் பயணித்து வந்த நிலையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் 103 விமானங்களில் 7,700 பேரும், சென்னைக்கு வரும் 103 விமானங்களில் 8,100 பேரும் மொத்தம் 206 விமானங்களில் 15 ஆயிரத்து 800 போ் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா். காலை 8 மணி டெல்லி விமானத்தில் 18 பேரும், 12.15 மணி டெல்லி விமானத்தில் 48 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனா். இன்று பகல் 2 மணிக்கு அந்தமான் செல்லவிருக்கும் விமானத்தில் பயணிக்க இதுவரை ஒருவா் கூட முன்பதிவு செய்யவில்லை.

சென்னையிலிருந்து காலை 9.05 மணிக்கு மதுரைக்கு செல்லவிருந்த விமானமும், காலை 11.15 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வரும் விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இன்று நாடு தழுவிய முழு அடைப்பு; 18 கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details