வட்டார கல்வி அலுவலர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு வரும் 14 ,15, 16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தமிழ்நாடு முழுவதும் 57 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வினை 24 ஆயிரத்து 420 ஆண்களும், 40 ஆயிரத்து 266 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 64 ஆயிரத்து 710 நபர்கள் எழுத பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.