சென்னை: 'கும்குவாட்' இந்த பழத்தைச் சாதாரணமாகக் கேட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ மாட்டோம். ஆனால் நூற்றாண்டுகளாக இந்தியா, ஜப்பான், தைவான், பிலிபைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த பழம் பயிரிடப்படுகிறது. எழுமிச்சைப் பழம் நீள் வடிவத்தில் இருந்து ஆரஞ்சு பழத்தின் நிறம் கொண்டிருக்கும் வகையில் இருந்தால் அது 'கும்குவாட்' பழம். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையும் கலந்ததுபோல் இருக்கும் இந்த பழத்தைத் தோலுடன் அப்படியே சாப்பிடலாம். பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த பழம் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
கும்குவாட் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்;
- வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், தாமிரம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளன.
- அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது.
- பழத்தின் விதைகள் மற்றும் தோலில் சிறிதளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
- அதிகப்படியான நீர்ச்சத்தும் உள்ளது.
- கும்குவாட் பழங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 13 கலோரிகள் உள்ளன.
கும்குவாட் பழத்தின் நன்மைகள்;
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றவும், ரத்ததில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- சிறுநீரகச் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
- புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
- புற்றுநோய் செல்கள் மற்றும் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட பிற செல்களை அகற்ற உதவுகிறது.
- கும்குவாட் பழம் உடலுக்கு எந்த வகையில் பலன் தரும்;
ஆக்ஸிஜனேற்றம்:பழத்தின் தோலில் சதையை விட அதிக ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவற்றின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருதய நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கும்குவாட்ஸில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் கொலஸ்ட்ராலுக்கு மிகவும் பயனளிக்கிறது
நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலப்படுத்துகிறது: இந்த பழம் சளி, இருமல் மற்றும் சுவாச மண்டலத்தின் பிற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
உடல் எடையை நிர்வகிக்கிறது: கும்குவாட்டில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்கள் உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.