தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வூதிய காப்பீட்டு திட்டம் எதற்காக? நாளைக்காக இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.! - why retirement planning is essential

Benefits of Retirement plan in Tamil: பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை எவ்வாறு சமாளிப்பது

ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள்
ஓய்வூதிய திட்டமிடல் என்றால் என்ன

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 4:06 PM IST

சென்னை: மன அமைதியுடனும், அன்பிற்குரியவர்களுக்கு சுமையாக இல்லாமலும் வாழ்க்கையை அனுபவிக்கும் காலம்தான் ஓய்வூதிய காலமாகும். ஓய்வுபெறும் நேரத்தில் மனதில் புதிய கனவுகள் மற்றும் இலக்குகள் தோன்றலாம். ஆனால், பெரும்பாலானோர் தங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிடுவதில் சிரமப்படுகிறார்கள்.

ஓய்வூதிய திட்டங்களின் மூலமாக உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மன அமைதியைப் பெறவும் முடியும். ஓய்வு பெற்ற நேரங்களில் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பலாம், உலகம் முழுவதும் பயணம் செய்யலாம் அல்லது உங்கள் பிள்ளையின் உயர்கல்வி அல்லது திருமணம் போன்ற கடமைகளை நீங்கள் நிறைவேற்ற விரும்பலாம்.

உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சிறிய ஓய்வூதிய திட்டமிடல் மூலம், நிதி சுதந்திரத்தை பராமரித்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

ஓய்வூதிய திட்டமிடல் என்றால் என்ன?

ஓய்வூதிய திட்டமிடல் என்பது “சிறு துளி பெருவெள்ளம்”போன்றது. உங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக இன்றிலிருந்து சிறுக சிறுக சேமிப்பதாகும். இதன் மூலம் எதிகாலத்தில் உங்கள் கனவுகளை நீங்கள் சுதந்திரமாக செயல்படுத்த முடியும். தனிப்பட்ட தேவைகளுக்காக முன்கூட்டியே சேமித்து வைப்பதாகும்.

ஓய்வூதிய திட்டத்தின் அவசியம்:ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு தனிநபரின் ஓய்வுக்குப் பிந்தைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு வகை ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். ஓய்வூதியத்தை திட்டமிடுவதை நீங்கள் இன்று புரக்கணிக்கிறீர்கள் என்றால் அது உங்கள் எதிர்கால நிதி பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது உங்கள் பொன்னான ஒய்வு காலத்தில் நிம்மதியான வாழ்வை கேள்விக் குறியாக்கும்.

ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள்:

  • ஓய்வு பெற்ற காலங்களில் நிதி ரீதியாக சதந்திரமாக வாழ்வதற்கு உதவுகிறது.
  • அமைதியான மற்றும் மன அழுத்தமிலாத வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.
  • ஓய்வு பெற்ற காலங்களில் தொடங்கப்படும் புதிய முயற்சிகளுக்கு உதவுகிறது.
  • தேர்ந்தெடுக்கும் பாலிசியின் வகையைப் பொறுத்து, ஓய்வூதியத் திட்டமிடல். செயல்முறையானது பல வரிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைக் கொண்டுள்ளது.
  • ஓய்வு பெற்ற காலங்களில் சுதந்திரமாக நீங்கள் முடிவெடிக்க வழிவகுக்கிறது.

ஓய்வூதிய திட்டத்தின் முக்கியத்துவம்:

  • வயதான காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எனவே மருத்துவ வசதிகாக சேமிப்பை பாதிக்காமல் செலவை சரிசெய்வதற்கு இந்த திட்டம் உதவுகிறது.
  • ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் வருமானம் அன்றாட செலவுகளை சமாளிக்க உதவுகிறது.
  • இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் எதிர்காலத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவும்.
  • ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் தொடங்க நினைக்கும் பல முயற்ச்சிகளுக்கு, எந்த கவலையும் இன்றி நிறைவேற்ற இவை உதவுகிறது.

இதையும் படிங்க:Blood Detoxification Yoga in Tamil: இரத்தத்தைச் சுத்திகரிக்கும் யோகா.? தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.!

ABOUT THE AUTHOR

...view details