தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில், Belongs to the Dravidian stock என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
திராவிடம் என்ற சொல்லே சமூக நீதிக்கான மாற்று சொல்: சுப. வீரபாண்டியன் - mk stalin
சென்னை: திராவிடம் என்ற சொல்லே சமூக நீதிக்கான மாற்றுச் சொல்தான் என திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் கூறுகையில், “1962ஆம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்வான பேரறிஞர் அண்ணாதுரை, தனது தொடக்க உரையை I Belongs to the Dravidian Stock என்றுதான் ஆரம்பித்தார். அதற்கு நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்பதாகும்.
அப்படி என்றால், என்றென்றும் நான் சமூக நீதிக்கு, சமத்துவத்திற்கு, சகோதரத்துவத்திற்குப் பாடுபடுவேன் என்பதுதான். திராவிடம் என்றால், அதை நாம் கேரளா, கர்நாடகா, ஆந்திர எல்லைகளைச் சேர்த்துப் பார்க்கத் தேவையில்லை. திராவிடம் என்ற சொல்லே சமூக நீதிக்கான மாற்றுச் சொல்தான்” என்றார்.