சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் வசித்துவருபவர் தொழிலதிபர் ரோசன் ரங்டா (31). இவர் நேற்று முன்தினம் (அக். 06) மதியம் 2 மணியளவில் தனது குடும்ப உறுப்பினர்களின் மதிய உணவுக்காக ஸ்விக்கியின் மூலமாக டோமினோசில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், ஸ்விக்கியின் டெலிவரி ஊழியர் பீட்சாவை கொண்டுவருவதற்குத் தாமதம் ஆகியுள்ளது. இதனால் ரோசன் ரங்டா டெலிவெரி ஊழியருக்கு போன்செய்து விரைந்து வரும்படி கூறியுள்ளார்.
ஆனால் டெலிவரி ஊழியர் வருவதில் மீண்டும் தாமதம் ஆகியுள்ளது. சுமார் 1 மணி நேரம் கழித்து பீட்சாவை டெலிவரி செய்வதற்காக டெலிவரி ஊழியர் வந்துள்ளார்.