சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும், அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் 1140 இடங்களும் என 2040 இடங்களில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் https://www.tngasa.in என்ற இணையதளத்தில் இன்று (செப்.11) மதியம் 1 மணி வரை 6045 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 3492 மாணவர்கள் கட்டணத்தை செலுத்தியுள்ளனர் என கல்லூரிக்கல்வி இயக்குனர் கீதா தொிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும், அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் 1,140 இடங்களும் என 2,040 இடங்களில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு செப்டம்பர் 1 முதல் 11 வரை ஆன்லைன் மூலம் https://www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்குநர் செய்தி வெளியீட்டில் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. மேலும், கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விபரங்கள் https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்:விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும்செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் கல்லூரி உதவி சேர்க்கை மையங்களில் "The Director, Directorate of collegiate education, chennai-15" என்ற பெயரில் செப்டம்பர் 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும், நேரடியாகவும் கட்டணத்தை செலுத்தலாம்.விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
மேலும் விபரங்களை பெறுவதற்கு 93634 62070, 93634 62007, 93634 62042, 93634 62024 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 5139 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி.. சம்பவ இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ஆய்வு.. காவல்துறை விளக்கம் என்ன?