சென்னை: பொதுவாக நெய்யை சமையலுக்கு பயன்படுத்துவர். அதைத் தவிர்த்து சிலர் விளக்கு ஏற்றுவதற்காகவும் பயன்படுத்துவர். ஆனால், நெய் சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் (moisturizer) என்று எத்தனை பேருக்கு தெரியும்? நெய்யில் உள்ள அழகு நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நெய் சருமத்திற்கு நல்லதா?நெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகத்தில் தோன்றும் முகப்பருக்களை நீக்கி முகத்திற்கு பிரகாசமான தோற்றத்தை அளிக்கும். நெய்யை பயன்படுத்தினால், முகத்தில் இருக்கும் வடுக்கள், காயங்கள், கரும்புள்ளிகள், கட்டிகள், தீக்காயங்கள், முகப்பருக்களால் வந்த கட்டிகள் அனைத்தும் மறையும்.
உதடு மென்மையாக வேண்டுமா? பொதுவாக பெண்கள் உதடு மென்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், சில சமயங்களில் வறட்சியாகவும், கருமையாகவும், வெடிப்பு போன்று தோன்றி சுருக்கமாகவும் இருக்கும். பொதுவாக இவை தண்ணீர் பற்றாக்குறை, வெயில் படுவது மற்றும் தரம் குறைவான லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படலாம். எனவே, உடலுக்கு தேவையான தண்ணீரை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கூடவே இரவில் தூங்கும் போது உதட்டில் நெய் தடவினால் உதடு மென்மையாகும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
கண்களை சுற்றி கருவளையம் நீங்க:நெய்யில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. எனவே, அவற்றை கண்களை சுற்றி உள்ள கருவளையத்தை போக்க உதவும்.