தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

மெரினா கடற்கரையைப் போல் வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், சென்னையில் உள்ள 15 இடங்களில் விரைவில் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.

kagandeep
kagandeep

By

Published : Jul 22, 2021, 3:20 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை, புதுப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்களில் காலவதியான வாகன கழிவுகளையும் பயனுள்ளதாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்து பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மெரினா கடற்கரையில் நிறுவப்பட்ட சிற்பங்கள்

அதன்படி வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்டப் பகுதிகளில் பயன்படாத இயந்திரக் கழிவுகள் மூலமாக ஜல்லிக்கட்டு காளை என பல்வேறு சிற்பங்கள் வடிவமைத்து காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 20ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையிலும் மீன், நண்டு, இறால், விவசாயி சிற்பங்களை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டது.

உலோகக் கழிவுகளில் இருந்து இதுபோன்ற அழகான சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு, பொது இடங்களில் வைக்கும்போது, பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைவதோடு, பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் வரும் நாட்களில் தலைமைச் செயலகம், விமான நிலையம், பெசன்ட் நகர் கடற்கரை, கோயம்பேடு உள்ளிட்ட 15 இடங்களிலும் சிற்பங்களை வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ககன் தீப் சிங் பேடி யார்... கல்லூரி ஆசிரியர் முதல் சென்னை மாநகராட்சி ஆணையர்வரை...

ABOUT THE AUTHOR

...view details