சென்னை: தமிழ்நாட்டில் நூதன முறையில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் முகநூல் மூலமாக பல்வேறு வகையிலான மோசடிகளும் அரங்கேறியிருக்கின்றன. குறிப்பாக ஆண்களை ஆபாச வலைக்குள் சிக்க வைத்து மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கூட்டம் முகநூல் பக்கங்களை கேடயமாக பயன்படுத்தி செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் முகநூலில் உள்ள பிரபலமான ஆண்களை தேர்வு செய்து அவர்களுக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்பி நட்பு வலையை வீசுகின்றனர். அவர்களிடம் உரையாடும் அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை ஒரு பெண்போல் சித்தரித்து ஆசை வார்த்தைகள் கூறி சம்பந்தப்பட்ட ஆண்களின் தொடர்பு எண்களை பெற்று வாட்ஸ் ஆப் மூலம் உடனடியாக உரையாடத் தொடங்கி விடுகின்றனர்.
வீடியோ பதிவு செய்து மிரட்டல்
ஒன்றிரண்டு நாட்களுக்குள் ஆசை வார்த்தையாகவும், ஆபாச வார்த்தையாகவும் இருவருக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அந்த நபர்கள் அடுத்தக்கட்டமாக வீடியோ காலில் அழைக்கின்றனர். வீடியோ காலில் தங்கள் கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை நிர்வாணமாக தோன்றவைத்து, எதிர் முனையில் பேசும் ஆண்களையும் நிர்வாணமாக்குகின்றனர்.
ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அவர்களுடன் பேசும் ஆண்கள் நிர்வாணமாக அவர்களுடன் பேசப் பேச அதைப் பதிவு செய்துகொண்டு இணைப்பைத் துண்டித்துவிடுகின்றனர். பின்னர் தொலைபேசியில் அழைக்கும் அவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கேட்டு சம்மந்தப்பட்ட ஆண்களை மிரட்டத் தொடங்குகின்றனர். பணம் தரமாட்டேன் என கூறும் ஆண்களிடம் , தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிவிடுவேன் என மிரட்டி பணத்தை செலுத்த நிர்பந்தப்படுத்துகின்றனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல குவியும் புகார்கள்
இந்நிலையில் இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து சைபர் கிரைம் காவல் துறையிருக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இப்புகார்களின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் 19 லட்ச ரூபாயை இழந்துள்ளனர் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த ஆபாச வலைக்குள் சிக்கி மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதேபோல கல்லூரி மாணவர் ஒருவரும் இதே பாணியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி, பெண் பெயரில் அந்த முகநூல் கணக்கு குறித்து முகநூல் நிறுவனத்திற்கு புகார் அளித்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக அந்த கல்லூரி மாணவரின் நண்பர்கள், தாய்க்கு அவர் பெண்ணோடு பேசும் நிர்வாண வீடியோவை அனுப்பிவிடுவேன் என மிரட்டியதையடுத்து பயந்துபோன அந்த மாணவர் அவர்கள் சொன்ன போன் பே எண்ணுக்கு 8 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின்தான் மோசடியில் சிக்கி கொண்டதை உணர்ந்து பெண்ணின் பெயரில் உலா வரும் அடையாளம் தெரியாத நபர் மீது புகாரை அளித்துள்ளார்.
17 லட்சம் ரூபாய் மோசடி