சென்னை:2023-2024ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தமாக 105 உள்ள நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14,600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8,316 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,032 இடங்களும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் என 17 இடங்கள் காலியாக இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான 4ஆம் சுற்று ஸ்ட்ரே வேகன்சி (stray vacancy) கலந்தாய்வினை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.