தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் காற்றைவிட வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் அதன் வீரியம் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு: தடுப்புகள் அமைப்பு - ஊரடங்கு உத்தரவு
சென்னை: பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் நகராட்சி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னையிலிருந்து வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றுவருகின்றனர். அவர்களை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களின் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் நகராட்சி முழுவதும் முக்கிய சாலையுடன் இணைக்கக் கூடிய பெரும்பாலான தெருக்கள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொருள்கள் வாங்க மக்கள் இரண்டு கி.மீட்டருக்குள் மட்டுமே நடந்து செல்ல வேண்டுமென்றும், வாகனங்களில் யாரும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.