சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், தற்போதைய உறுப்பினருமான செல்வம் தாக்கல் செய்த மனுவில், “ கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை பார் கவுன்சில் தலைவராக பதவி வகித்த போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு மற்றும் வழக்கறிஞர்கள் நடத்தை விதிகளை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்ததாகவும் இதற்காக தனது வீட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து 2015 முதல் தனக்கும் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பார் கவுன்சில் முன்னாள் தலைவர் புகார் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் பார் கவுன்சில் உறுப்பினராக உள்ள எனக்கு தற்போதும் மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் ஆணையருக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நக்கீரன் ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி காவல்துறை இயக்குநருக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தப்பியோடிய ராஜபக்ச குடும்பம்... பட்டாசு வெடித்த கோயம்புத்தூர்வாசிகள்...