தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத ஹுக்கா பாட்டில்கள் பறிமுதல்: பார் உரிமையாளர் கைது - Bar owner arrested

தனியார் பாரில் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய ஹுக்கா பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டு, பார் உரிமையாளர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

ஹூக்கா பாட்டில்கள் பறிமுதல்
ஹூக்கா பாட்டில்கள் பறிமுதல்

By

Published : Oct 11, 2021, 8:58 AM IST

சென்னை: சென்னையின் ராயபுரம் ஆதியப்பா கிராமணி தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள காய்ன் காபி என்ற தனியார் பார் ஒன்றை நடத்திவருகிறார்.

இந்நிலையில் அங்கு உணவகம் நடத்துவதாகக் கூறி, சட்டவிரோதமாக ஹுக்கா பயன்படுத்தப்படுவதாக வேப்பேரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஹுக்கா பாட்டில்கள், டியூப்கள் பறிமுதல்

தகவலின் அடிப்படையில் பாரில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், பாரின் இரண்டாவது தளத்தில் சட்டவிரோத ஹுக்கா பயன்படுத்தியதைக் கண்டறிந்தனர்.

மேலும் அங்கிருந்த நான்கு ஹுக்கா பாட்டில்கள், ஆறு டியூப்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து பார் உரிமையாளர் குமாரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஓசியில் சரக்கு தராத டாஸ்மாக் விற்பனையாளரின் முகத்தை வெட்டிய மதுப்போதை ஆசாமிகள்

ABOUT THE AUTHOR

...view details