சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.
உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும்: முதலமைச்சரிடம் வேண்டுகோள் - edappadi palanisamy
சென்னை: உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பிறகு தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், “வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி தர வேண்டும், சட்டக்கலை அகாதெமி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டுவருவதற்கு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதோடு உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் தொடங்குவதற்கு குடியரசுத் துணைத்தலைவர்கூட பரிந்துரை செய்துள்ளார். எனவே தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.