தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடை விஷயத்தில் கறார்! வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு!

Bar Council announced Dress code mandatory: இந்திய பார் கவுன்சில் வகுத்துள்ள ஆடை விதிமுறைகளை அனைத்து வழக்கறிஞர்களும் பின்பற்ற வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 8:46 PM IST

சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி ஆடை விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பது தங்கள் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, வழக்கறிஞர்கள் அணியும் ஆடைகள் அல்லது கவுன்களின் வடிவம் இந்திய பார் கவுன்சில் விதிகளின் படி, இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கண்ணியமாக ஆடைகளை அணிய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். ஆண் வழக்கறிஞர்களை பொறுத்தவரை, ​​வக்கீல்களின் கவுன்களுடன் கூடிய கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டை அணிய வேண்டும், வக்கீல் கவுன்களுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கண்டிப்பாக, ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பெண் வழக்கறிஞர்கள் ​​கருப்பு முழு கை ஜாக்கெட், வெள்ளை பட்டைகள் மற்றும் வழக்கறிஞர்கள் கவுன்கள், வெள்ளை ரவிக்கை, காலர் கொண்ட அல்லது வெள்ளை பட்டைகள் மற்றும் கருப்பு கோட் அணிய வேண்டும், அல்லது புடவைகள் அல்லது நீளமான ஓரங்களில் அச்சு அல்லாத வடிவமைப்பு இல்லாமல் வெள்ளை அல்லது கருப்பு அல்லது ஏதேனும் மெல்லிய அல்லது அடக்கமான நிறம் கொண்ட உடை, பஞ்சாபி உடையான சுடிதார் - குர்தா அல்லது சல்வார் - குர்தா துப்பட்டாவுடன் அல்லது இல்லாமல் அல்லது கருப்பு கோட் மற்றும் பட்டைகள் கொண்ட பாரம்பரிய உடை அணிய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் அணிவது, கேப்ரி பேன்ட், ஷார்ட்ஸ், லெகின்ஸ் போன்றவை கண்டிப்பாக அணியக்கூடாது என்றும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட உடையில் மட்டுமே ஆஜராக வேண்டும், உரிய ஆடை விதிகளின்படி, ஆஜராக வேண்டியது அனைத்து வழக்கறிஞர்களின் கடமை என்றும், வக்கீல்கள் சட்டம், 1961-ன் பிரிவு 35-ன் கீழ் எந்த மீறலும் தொழில்முறை தவறான நடத்தைக்கு சமம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்திய பார் கவுன்சில் அல்லது நீதிமன்றம் பரிந்துரைக்கும் சம்பிரதாய நிகழ்வுகள், நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:Chennai Crime News:ஹெல்மெட்டை திருடிய காவல் ஆய்வாளர்..

ABOUT THE AUTHOR

...view details