நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் - மறைந்த விவேக்கிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
சென்னை: விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vivek
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விவேக்கின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கும், திரைத்துறையினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.