இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், நாட்டைக் காக்கக்கூடிய சவாலான பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ஹவில்தார் பழனியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீரமரணம் அடைந்த பழனிக்கு ஆளுநர் புரோகித் இரங்கல்! - Banwarilal Purohit
சென்னை: இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஹவில்தார் பழனியின் ஆன்மா சாந்தியடைய தான் இறைவனை வேண்டிக்கொள்வதாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
ஆளுநர்
அதேபோல், பழனியின் இச்சேவையை நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வர் எனவும் ஆளுநர் புரோகித் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த பழனியின் ஆன்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தினர் இந்தத் துயரத்தில் இருந்து விரைந்து வெளியேறவும் இறைவனை வேண்டிக்கொள்வதாக பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.