சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெட்டிவேரால் தயார்செய்யப்பட்ட 1000 முகக் கவசங்களைக் காவலர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாஞ்சா நூல் வைத்து பட்டம் விற்ற விவகாரத்தில் இந்தாண்டு மட்டும் 95 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு அதிக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 80 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் மட்டுமின்றி தயாரிப்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல பகுதிகளில் பட்டம் விடுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டாக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ், முன்களப் பணியாளர்களுக்கு இந்த முகக்கவசம் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு மாஞ்சா நூலுக்கு தடை