சென்னை:ஆன்லைன் மூலமாக தடை செய்யப்பட்ட பட்டம் மற்றும் மாஞ்சா நூல் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் செல்போன் எண்ணை வைத்து அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டிலிருந்து 1500 காற்றாடி, லொட்டாய் 600, 2 மாஞ்சா நூல், 4 மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.