தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதைப் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போதைப் பொருள்களுக்குப் பலரும் அடிமையாகியுள்ள நிலையில், அவர்களைக் குறிவைத்து, வெளிமாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக குட்காவை வியாபாரிகள் வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
சென்னையிலும் இந்த போதைப் பொருள் விற்பனை களைகட்டிவருகிறது. இருப்பினும், இதனை காவல் துறையினர் கண்டுபிடித்து, விற்பனையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இச்சூழலில், சிலர் சென்னை வால்டாக்ஸ் பகுதியில் போதைப் பொருள்களைக் கடத்திச் செல்வதாக யானைகவுனி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வால்டாக்ஸ் சாலையில் உள்ள பார்சல் அலுவலகத்தில் சந்தேகத்திற்கிடமாக இருவர் கோணிப்பைகளைத் தூக்கிச் சென்றதைக் கண்டறிந்துள்ளனர்.