தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்- மக்கள் பாதிப்பு - ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி

சென்னை: ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி இன்று, நாளை பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

bank_strike
bank_strike

By

Published : Jan 31, 2020, 7:16 PM IST

வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக ஊதிய உயர்வு முதலிய கோரிக்கைகளை முன்வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். வங்கி ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் ஊதிய ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு முதல் புதுக்பிக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக புதுப்பிக்க வலியுறுத்தி 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களைக் உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் இன்று நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுத்துறை வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளது. ஏடிஎம் சேவைகளும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் மார்ச் 11 முதல் 13 வரை வேலை நிறுத்தம் நடத்தப்படும், அப்போதும் கோரிக்கை நிறைவேற்றப்படாவில்லை என்றால் ஏப்ரல் 1ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இயங்கவில்லை. இன்று மற்றும் சனிக்கிழமை வங்கி சேவைகள் பாதிக்கப்படும். அடுத்த நாள் ஞாயிறு என்பதால் 3 நாட்கள் வங்கி சேவை முடங்கும். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : மாணவர்களின் திறனை அறியவே 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - சரத்குமார்

ABOUT THE AUTHOR

...view details